Photoshop Lesson 2 - Tamil

போட்டோவில் உள்ள வெளிச்சம் (brightness) மற்றும் கலர் அளவினை(contrast) சரிசெய்தல்.

இந்த பாடத்தில் ஒரு போட்டோவில் உள்ள வெளிச்சத்தினை அதிகரிப்பது அல்லது குறைப்பது பற்றி படிப்போம். சிலவேளைகளில், நாம் போதிய வெளிச்சமில்லாத இடத்தில் போட்டோக்களை எடுத்திருப்போம். அந்த போட்டோ இருட்டடைந்தது போல தெளிவின்றி இருக்கும். அதைச் சரி செய்ய, அந்த போட்டோவில் உள்ள வெளிச்சத்தினை அதிகரிக்க வேண்டும்.

1) உதாரணமாக, கீழே உள்ள "மான்கள்" படத்தைப் பாருங்கள். இந்த போட்டோ சற்றே இருட்டாக இருப்பது போல் உள்ளது. இப்போட்டோவின் வெளிச்சத்தினை அதிகரித்து அதனைச் சரி செய்வோம்.



2) முதலில் இந்த "மான்கள்" படத்தை நீங்கள் Copy செய்து உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள போட்டோஷாப்பின் உள்ளே Paste செய்ய வேண்டும். அதனை எவ்வாறு செய்வது?

3) மேலே உள்ள மான்கள் படத்தின் மீது mouse யை வைத்து mouseன் வலது பட்டனை (right button of mouse) அழுத்துங்கள். இப்பொழுது ஒரு menu தோன்றும். அந்த menuவில் "Copy" அல்லது "Copy Image" என்பதை click செய்யுங்கள். (அதாவது, Internet Explorerல் "Copy" என்று இருக்கும். Mozilla Firefoxல் "Copy Image" என்று இருக்கும்).



4) அடுத்து, நீங்கள் போட்டோஷாப்புக்கு சென்றுவிடுங்கள். போட்டோஷாப்பில் "File" menuவில் "New..." என்பதை click செய்யுங்கள்.



5) இப்பொழுது, "New" என்ற Window திரையில் தோன்றும். அதில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். அதில் உள்ள "OK" பட்டனை மட்டும் அழுத்துங்கள்.



6) இப்பொழுது ஒரு புதிய பைல் உங்கள் திரையில் இருக்கும். அடுத்து, "Edit" menuவில் "Paste" என்பதை click செய்யவும்.



7) இப்பொழுது "மான்கள்" படம் உங்கள் போட்டோஷாப்பின் உள்ளே இருக்கும். இனி இந்த படத்தில் உள்ளே வெளிச்சம் (brightness) மற்றும் கலர் அளவினை (contrast) சரி செய்தல் பற்றி படிப்போம்.

8) "Image" என்ற menuவில் "Adjustments" என்பதை click செய்யவும். இப்பொழுது "Adjustments" என்பதின் வலதுபக்கத்தில் ஒரு menu தோன்றும். அதில் "Brightness/Contrast..." என்பதை Click செய்யவும்



9) இப்பொழுது, "Brightness/Contrast" என்ற Window திரையில் தோன்றும். அதில் "Brightness:" என்பதற்கு கீழே முக்கோணவடிவில் ஒரு சிறிய பட்டன் இருக்கும். இந்த பட்டனை வலதுபுறத்தில் (right side) நகர்த்தினால் படத்தின் வெளிச்சம் (brightness) அதிகரிக்கும். இந்த பட்டனை இடதுபுறத்தில் (left side) நகர்த்தினால் படத்தின் வெளிச்சம் குறையும்.



10) இந்த "Brightness" பட்டனை வலதுபுறம் நகர்த்துங்கள். இதனால் படத்தின் brightness அதிகரிக்கும். நீங்கள் brightnessயை அதிகரிக்கும் பொழுது அதன் அளவு ஒரு சிறிய textboxல் காட்டப்படும். நீங்கள் brightnessன் அளவு, அந்த textboxல் "+50" என்று வரும்படிச் செய்யுங்கள்.



11) Brightnessக்கு கீழே contrast என்று இருக்கும். Contrast என்பது படத்தில் உள்ளே கலரின் அளவு ஆகும். நீங்கள் "Contrast"க்கான பட்டனை வலதுபுறம் நகர்த்துங்கள். Contrastன் அளவு "+25" என்று வரும் படிச் செய்யுங்கள். அடுத்தது "Brightness/Contrast" windowவில் உள்ள "O.K" பட்டனை அழுத்துங்கள்.

12) இப்பொழுது உங்கள் திரையில் பாருங்கள். கீழ்கண்ட படத்தில் உள்ளவாறு "மான்கள்" படம் வெளிச்சமாக மாறி இருக்கும். ஆஹா, முன்பு இருட்டாக இருந்த மான்கள் படம், உங்கள் கைவண்ணத்தினால் இப்பொழுது நன்கு வெளிச்சமாகவும், தெளிவாகவும் மாறிவிட்டது. உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.



13) இதேபோல உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஏதாவது ஒரு படத்தினை போட்டோஷாப்பின் உள்ளே open செய்து அதன் brightness மற்றும் contrastயை மாற்றம் செய்து பாருங்கள்.

14) உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள படத்தை போட்டோஷாப்பில் open செய்ய "File" menuவில் "Open..." என்பதை click செய்யவும். பிறகு உங்களுக்குத் தேவையான படத்தை செலக்ட் செய்து அதனை "open" செய்யுங்கள். அதன் பிறகு அப்படத்தின் brightness & contrast யை மாற்றிப்பாருங்கள். உங்களது முயற்சி வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்.
அடுத்தாக மூன்றாம் பாடத்தை படிக்கச் செல்வோமா!