Photoshop Lesson 5 - Tamil

Photoshop Lesson 5 - Tamil
பாடம் 5 - "பேட்டர்ன்"யை (Pattern) பயன்படுத்தி பேக்ரவுண்ட் (background) டிசைனை உருவாக்குதல்.
( Creating background design by using Pattern )

ஒரு ஆர்ட் டிசைனை (Art Design) பலமுறை திரும்பத் திரும்ப வரிசையாக வரைந்து ஒரு பெரிய அளவிலான பேக்ரவுண்ட் (background) டிசைனை போட்டோஷாப்பில் உருவாக்கலாம். அந்த ஆர்ட் டிசைனை "பேட்டர்ன்" (pattern) என்று போட்டோஷாப்பில் அழைக்கின்றனர். அந்த பேக்ரவுண்ட் டிசைனை வாழ்த்து அட்டைகளில் (greeting cards) பிரிண்ட் செய்வதற்கு பயன்படுத்தலாம்

1) கீழே உள்ள "ஆர்ட் டிசைன்" (Art Design) படத்தைப் பாருங்கள். இதுதான் "பேட்டர்ன்" (pattern) ஆகும். இதனை பயன்படுத்தி பெரிய அளவில் ஒரு பேக்ரவுண்ட் (background) டிசைனை உருவாக்குவோம்.



1) முதலில் மேலே உள்ள "ஆர்ட் டிசைன்" படத்தின் மீது mouse யை வைத்து mouseன் வலது பட்டனை (right button of mouse) அழுத்துங்கள். இப்பொழுது ஒரு menu தோன்றும். அந்த menuவில் "Copy" அல்லது "Copy Image" என்பதை click செய்யுங்கள். (அதாவது, Internet Explorerல் "Copy" என்று இருக்கும். Mozilla Firefoxல் "Copy Image" என்று இருக்கும்).

2) அடுத்து, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள போட்டோஷாப்பை open செய்யுங்கள். போட்டோஷாப்பில் "File" என்ற menuவில் "New..." என்பதை click செய்யுங்கள்.

3) இப்பொழுது, "New" என்ற Window திரையில் தோன்றும். அதில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். அதில் உள்ள "OK" பட்டனை மட்டும் அழுத்துங்கள்.



4) தற்பொழுது ஒரு புதிய பைல் (file) உங்கள் திரையில் இருக்கும். அடுத்து, "Edit" என்ற menuவில் "Paste" என்பதை click செய்யவும்.

5) இப்பொழுது "ஆர்ட் டிசைன்" படம் உங்கள் போட்டோஷாப்பின் உள்ளே இருக்கும். இனி இந்த படத்தைப் பயன்படுத்தி பேக்ரவுண்ட் (background) டிசைனை உருவாக்குவது பற்றி படிப்போம்.

6) அடுத்து, நாம் போட்டோஷாப்பில் உள்ள பேட்டர்ன் (Pattern) என்ற வசதியை பயன்படுத்தப்போகிறோம். அதற்கு, "Edit" என்ற menuவில் "Define Pattern..." என்பதை click செய்யுங்கள்.



7) இப்பொழுது, "Pattern Name" என்ற Window உங்கள் திரையில் தோன்றும். அந்த Windowவின் இடது பக்கத்தில் அந்த "ஆர்ட் டிசைன்" படம், சிறிய படமாக காட்சி தரும். இந்த Windowவில் நீங்கள் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். அதில் உள்ள "OK" பட்டனை மட்டும் அழுத்துங்கள்.



8) அடுத்து, "File" என்ற menuவில் "New..." என்பதை click செய்யுங்கள். இப்பொழுது, "New" என்ற Window திரையில் தோன்றும். அதில் கீழே குறிப்பிட்டுள்ளபடி select செய்யுங்கள்.
  • Width : 600 pixels
  • Height : 400 pixels
  • Resolution : 72 pixels/inch
  • Mode : RGB Color
  • Contents : White
உங்கள் உதவிக்காக கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
அடுத்து, "New" Windowவில் உள்ள "OK" பட்டனை அழுத்துங்கள்.



9) அடுத்து, "Edit" என்ற menuவில் "Fill" என்பதை click செய்யுங்கள்.



20) இப்பொழுது "Fill" என்ற தலைப்பில் ஒரு window உங்கள் திரையில் தோன்றும். அந்த "Fill" Window கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. அதில் "Use:" என்று இருக்கும். அதன் வலதுபுறத்தில் ஒரு ListBox இருக்கும். அந்த ListBoxல் உள்ள அம்புக்குறியில் click செய்யுங்கள்.



21) உடனே ஒரு List திரையில் வரும். அந்த Listல் "Pattern" என்பதை click செய்யுங்கள். உங்கள் உதவிக்காக கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.



22) "Fill" Windowவில் "Custom Pattern: " என்று இருக்கும். அதன் வலதுபுறம் உள்ள சிறிய படத்தின் மீது click செய்யுங்கள்.



23) உடனே ஒரு சிறிய window திரையில் தோன்றும். அந்த window வின் உள்ளே சிறிய கட்டங்களில் Pattern டிசைன்கள் இருக்கும். அதில், உங்கள் "பேட்டர்ன்" டிசைன் கடைசியாக இருக்கும். அந்த பேட்டர்ன் டிசைன் மீது click செய்யுங்கள். உங்கள் உதவிக்காக கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
மேலும், "Mode" என்பதின் வலதுபக்கத்தில் "Normal" என்பதை செலக்ட் செய்யுங்கள்.
"Opacity" என்பதின் வலதுபக்கத்தில் 100 என்று type செய்யுங்கள்.



24) அடுத்து, "Fill" Windowவில் உள்ள "O.K" பட்டன் மீது click செய்யுங்கள்.



25) இப்பொழுது, உங்கள் திரையில் பாருங்கள். கீழே உள்ள படத்தைப் போல, உங்கள் படமும் இருக்கும். அதாவது, உங்கள் "பேட்டர்ன்" டிசைன் பல வரிசைகளில் அடுத்தடுத்து வைத்தது போல இருக்கும். இந்த டிசைனை அட்டைபெட்டிகளில் பிரிண்ட் செய்வதற்கு பயன்படுத்தலாம். அல்லது, வாழ்த்து அட்டைகளில் பேக்ரவுண்ட் டிசைனாக (background design) பயன்படுத்தலாம்.


இத்துடன் இப்பாடம் இனிதே நிறைவடைகிறது. இதனைப் படித்த பிறகு, உங்கள் கம்யூட்டரில் இதைச் செய்து பாருங்கள். உங்கள் முயற்சி வெற்றி பெற எங்கள் நல்வாழ்த்துக்கள்.