Photoshop Lesson 4 - Tamil

கலர் போட்டோவை கருப்புவெள்ளை படமாக மாற்றி, அதில் திருத்தம் செய்தல்.
Changing a Colour Photo into Black and White Photo and adjusting it


சில நேரங்களில் நாம் கலராக உள்ள ஒரு போட்டோவை லேசர் பிரிண்டரில் அச்சிட வேண்டியிருக்கும். அதில் எடுக்கப்படும் பிரிண்ட் அவுட் (print out) பேப்பரில் கருப்பாக இருக்கும். ஒரு கலர் போட்டோவை கருப்பு வெள்ளையாக மாற்றினால் அது எப்படி இருக்கும் என்பதை நாம் போட்டோஷாப்பில் செய்து பார்க்கலாம்.

1) கீழே உள்ள கிளிகள் படத்தைப் பாருங்கள். இந்தப் படத்தில் பல கலர்கள் உள்ளன. இந்தப் படத்தை கருப்புவெள்ளை படமாக மாற்றுவோம்.



2) மேலே உள்ள "கிளிகள்" படத்தை copy செய்யுங்கள். பிறகு உங்கள் போட்டோஷாப்பின் உள்ளே, ஒரு புதிய பைலை open செய்யுங்கள். அதில் இப்படத்தை paste செய்து கொள்ளுங்கள். (நாம் ஏற்கெனவே இரண்டாம் பாடத்தில், இதேபோல மான்கள் படத்தை copy செய்து paste செய்தோம்.)

3) அடுத்து, "Image" என்ற menuவில் "Adjustments" என்பதை click செய்யவும். இப்பொழுது "Adjustments" என்பதின் வலதுபக்கத்தில் ஒரு menu தோன்றும். அதில் "Desaturate" என்பதை Click செய்யவும்.



4) இப்பொழுது உங்கள் திரையில் பாருங்கள். முன்பு பலவண்ண நிறங்களில் இருந்த கிளிகள் படம், இப்பொழுது கீழ்கண்ட படத்தில் உள்ளது போல, கருப்புவெள்ளையாக மாறிவிட்டது. (Desaturate என்றால் கலரை நீக்குதல் என்று அர்த்தம். இந்த "Desaturate" நமது படத்தில் உள்ள அனைத்து கலர்களையும் நீக்கிவிட்டு, அப்படத்தை கருப்புவெள்ளையாக மாற்றிவிடும்.)



5) நமது கலர் படம் கருப்புவெள்ளையாக மாறிவிட்டது. ஆனால், இந்த படம் பளிச்சென்று (brightness) இல்லை. மேலும், அது கூர்மையாகவும் (sharpness) இல்லை. இந்த இரண்டையும் இப்படத்தில் எவ்வாறு கொண்டுவருவது?

6) அதற்கு, "Image" என்ற menuவில் "Adjustments" என்பதை click செய்யவும். இப்பொழுது "Adjustments" என்பதின் வலதுபக்கத்தில் ஒரு menu தோன்றும். அதில் "Equalize" என்பதை Click செய்யவும்.



7) இப்பொழுது, கீழே உள்ள படத்தைப் போல, உங்கள் திரையில் உள்ள படம் பளிச்சென்றும், கூர்மையாகவும் மாறிவிடும். இனி, திருத்தம் செய்யப்பட்ட இந்த கருப்புவெள்ளை படத்தை நீங்கள் லேசர் பிரிண்டரில் பிரிண்ட் அவுட் (print out) எடுக்கலாம்.



இத்துடம் நான்காம் பாடம் (fourth lesson) இனிதே நிறைவடைகிறது. அடுத்து ஐந்தாம் பாடத்தை (fifth lesson) படிக்கச் செல்வோமா!

பாடம் 5 - வலதுபக்கம் பார்த்தபடி இருக்கும் ஒரு போட்டோவை இடதுபக்கம் பார்த்தபடி திருப்பிவைத்தல்.